×

சிறு, குறு வர்த்தகம் அழிவதை வேடிக்கை பார்க்கும் அரசு: விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்

ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாக தமிழகத்தில் 37 லட்சம் வணிகர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வணிக முறை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.  ஒன்று ஏஜென்சி, மார்க்கெட், அடுத்து மொத்த வியாபாரி, சில்லறை  வியாபாரிகள். இப்படி நாங்கள் பிரித்துள்ளோம். இந்த நான்கில் ஆன்லைன் வர்த்தகம் வந்தால் ஏஜென்சி முதலில் அடிபட்டு விடும். பிறகு மார்க்கெட் இல்லாமல் போய் விடும். அதன்பிறகு மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் அடுத்தடுத்து அடிபட்டு போகும். இது தான், ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் வரக்கூடிய ஆபத்து. ஆபத்தினால் வியாபாரிகள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்று யாரேனும் நினைத்தால் அது  தன்னுடைய முட்டாள் தனமான எண்ணம். வியாபாரிகள் என்பது பல லட்சம் கோடியை தமிழக அரசுக்கு வசூலித்து கொடுப்பவர்கள் ஒன்று. இன்னொன்று உலகத்திலேயே வேலைவாய்ப்பை தானாக உற்பத்தி செய்யக்கூடிய வர்க்கம். இந்த வணிக வர்க்கம் மட்டும் தான். சாதாரணமாக ஒருவர் முதலாளியாக ஆக வேண்டுமென்றால் அவர் வியாபாரியாக இருக்க வேண்டும். ரூ.50 ஆயிரம் இருந்தாலும், ரூ.50 லட்சம், ரூ.5 கோடி வைத்திருந்தாலும் முதலாளியாக இருந்து  வியாபாரம் செய்யலாம். இந்த பக்குவம் வணிகர்களுக்கு மட்டும் தான் உண்டு. வேறு எந்த துறைக்கும் கிடைக்காது. இந்த துறை சார்ந்தவர்கள் நாட்டில் 21 கோடி பேர் உள்ளனர். இந்த 21 கோடி பேர் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று மற்றவர்கள்  ஏளனமாக எண்ணி விடக்கூடாது. ஒரு கணிசமான பொருளாதாரத்தையே சிதைக்கிறது ஆன்லைன் வர்த்தகம்

 சாதாரணமாக சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் சுற்றிப்பார்த்தால் ஒரு தெருவுக்கு 4 கடைகளில் இப்போது டூலெட் (வாடகை) போர்டு தொங்குகிறது. ஆனால், கடந்த 5 வருடம்  முன் பார்த்தால் டூலெட் போர்டு வைத்த மறுநாளே  கடைக்கு ஆள் வந்துவிடுவார்கள். ஆனால், இப்போது கடை காலியாக இருந்தால் கடை வைக்க ஆள் வரவில்லை. மாநில அரசு, கட்டிட வாடகைக்கு 100 சதவீதம் வரி விதித்துள்ளது. வரும் காலத்தில் வியாபாரிகள் கடையை காலி செய்யும்  நிலை வரும் போது, அந்த கட்டிடத்தின் உரிமையாளர் வரி செலுத்த முடியாமல் அந்த கட்டிடத்தை அரசு கைப்பற்றும் நிலை ஏற்படும். இதைத்தான் பொருளாதார நெருக்கடி என்பதை தெளிவாக தெரிவித்து வருகிறோம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் எங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி  வரி என இன்று வரை எங்களுக்கு தொழில் கடுமையாக பாதித்து  இருக்கிறது. இந்த ஆன்லைன் வர்த்தக தொழில் வந்த பிறகு 40 விழுக்காடு வணிகம் குறைந்துள்ளது. இந்த வணிகம் குறைந்து கொண்டே சென்றால் நாளடைவில்  ஒட்டுமொத்தமாக சாயும் நிலை ஏற்படும்.

இதை அரசு தாங்கி பிடிக்கவில்லை என்றால் 21 கோடி பேரின் வேலைவாய்ப்பு பறிபோய் விடும். நாளை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் வேடிக்கை  பார்த்து ெகாண்டிருந்தால் கிராமங்களில் துவங்கி நகரம் வரை சிறு, குறு வர்த்தகம் அழிவது உறுதி. ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். விளம்பரம் நடிக்கிற நடிகர்கள் கூட நெறிமுறை வகுத்து நடிக்க வேண்டும். ஒரு பொருளை வாங்க 10 கடைகளுக்கு மக்கள் ஏறி, இறங்குகிறார்கள். அங்கு பொருள் மட்டுமின்றி விலையும்  சோதிப்பார்கள். எங்கு தரமாக இருக்கிறதோ விலை குறைவாக இருக்கிறதோ அதைத்தான் வாங்குவார்கள். ஆன்லைனில் பொருளை சோதித்து வாங்க முடியாது. அவர்கள் சொல்லும் விலையில் தான் வாங்க முடியும்.ஆன்லைன் வர்த்தக தொழில் வந்த பிறகு 40 விழுக்காடு வணிகம் குறைந்துள்ளது. இந்த வணிகம் குறைந்து கொண்டே சென்றால் நாளடைவில் ஒட்டுமொத்தமாக சாயும் நிலை ஏற்படும்.Tags : Wickramarajah ,Govt. ,Tamil Nadu Merchants Association Small ,merchant associations ,Fun , Small, compact,destruction o,Commerce Government, vikkiramaraja,
× RELATED சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி: விக்கிரமராஜா வேண்டுகோள்