×

சிறிய வியாபாரத்தை ஆன்லைன் வர்த்தகம் அழிக்க முடியாது: அருள்ராஜன், பொருளாதார நிபுணர்

ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வியாபாரம் பாதிப்படையும் என்பது உண்மை தான். ஆனால், முழுவதுமாக பாதிப்படையுமா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் என்பது குறிப்பிட்டசாரர் அதுவும்  போனை நன்றாக இயக்க தெரிந்தவர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். இந்தியாவில் ஸ்மோர்ட் போன் பயன்படுத்துபவர்களில் ஒரு சிலர் தான் ஆன்லைன் பொருட்களை வாங்குவார்கள். ஒரு குறிப்பிட்ட அளவு கணிசமான பொருட்கள் விற்பனை   ஆன்லைனில் போகிறதா என்று பார்த்தால் நிச்சயம் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட வர்த்தக விற்பனை ஒவ்வொரு மாதமும் கூடத்தான் செய்கிறது. ஆனால், சிறிய வியாபாரத்தை அழிக்க முடியாது. கடையில் வாங்கும்  கூட்டம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. அவர்கள் கடைக்கு நேரடியாக சென்று கொண்டு தான் இருக்கின்றனர். கொஞ்சம் குறைந்தாலும் கடைக்கு செல்வோர் போகத்தான் செய்கின்றனர். இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் அரசுக்கு வரி என்பது எப்படி செலுத்தப்படுகிறது என்று பார்த்தால் எந்தெந்த ஏரியாவில் பொருட்கள் பில்லிங் செய்கிறார்களோ அங்கு  வரிகட்டுகிறார்கள். அந்த மாநிலத்துக்கு தான் வரி வருவாய் செல்கிறது. உதாரணமாக, குறிப்பாக, எந்த லோகேஷனில் பொருள் சப்ளை செய்யப்படுகிறதோ அந்த மாநிலத்துக்கு வரி கட்டப்படுகிறது.  

கடந்த காலங்களில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்ததால் உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் மூடப்பட்டன. இதே போன்று ஆன்லைன் வர்த்தகம் வருவதால் சிறிய வியாபாரம் அழிந்து விடுமோ என்று வணிகர்கள்  பயப்படுகின்றனர்.  குளிர்பானம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் மட்டுமே தான். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான பொருட்கள் உள்ளது. எந்த பொருட்களை யார் டாமினேட் செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இங்கு போட்டி ேபாட்டுக்  ெகாண்டு வியாபாரம் நடக்கத் தான் செய்கிறது. உள்நாட்டு வியாபாரிகளை அழித்து விட்டு வியாபாரம் செய்யக்கூடிய நிலைமை இப்போதைக்கு இல்லை. இன்னும் நுகர்வோர்கள் ஒரு பெரிய கூட்டம் கடைக்கு போய் பொருட்களை பார்த்து வாங்குபவர்கள் இன்னும் இங்கு உள்ளனர்.தற்போது ஒட்டு மொத்த இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதம் கீழ் வந்துள்ளது. இது 6 வருடங்கள் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எல்லோருக்கும் தெரியும் ஒவ்வொரு மாதமும் வாகன விற்பனை குறைந்ததால், பலர் வேலை வாய்ப்புகளை  இழந்தனர். ஆன்லைன் விற்பனையை ஒதுக்கி வைத்து பார்த்தால் ஒட்டு மொத்தமாக நுகர்வோர் வாங்கும் திறன் குறைந்து விட்டது என்பது தான் உண்மை. விற்பனை குறைந்ததற்கு காரணம் நுகர்வோர் வாங்கும் திறன்.

சிறிய அளவில் தான் ஆன்லைன் வர்த்தகத்துக்கு வருவாய் ேபாய் உள்ளது. பொருளாதார சரிவின் அடிப்படையில் நடக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் வியாபாரத்தை பெருக்க தந்திரமான வாய்ப்பு உள்ளது. அவர்கள் அந்த வர்த்தக இடத்தை  பிடித்தவுடன் பழைய விலைக்கு விற்பனை செய்வார்கள். ஆன்லைன் வாங்குபவர்கள் வேண்டுமானால் இந்த தந்திரத்தில் மயங்கி செல்லலாம். ஆனால், பலர் நேரடியாக பொருட்களை சோதித்து, விலையை பார்த்தே வாங்குகின்றனர். சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் கூட ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்களின் விலையை குறைத்தாலோ, விலையை அதிகரித்தாலோ கண்காணிக்கும் என்று கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால்,  வணிகர் சங்கத்தினர் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள குறைபாடுகளை மத்திய அரசிடம் எடுத்து கூறி அவர்களுக்கு ஏற்படும் பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.சிறிய வியாபாரத்தை அழிக்க முடியாது. கடையில் வாங்கும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் கடைக்கு நேரடியாக சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.

Tags : Business ,Arulrajan , Online Business , Destroy ,Small Business
× RELATED ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால்...