×

வக்கீல் இல்லாமல் பொதுமக்களே கோர்ட்டில் வாதாட கட்டுப்பாடு: புதிய குழு அமைக்க உத்தரவு

சென்னை: வக்கீல் இல்லாமல் பொதுமக்களே கோர்ட்டில் நேரடியாக ஆஜராகி வாதிட்டு வந்த நடைமுறையில் சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. வழக்காடிகளே (பொதுமக்கள்) ஆஜராகி வந்த, இந்த முறையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழில் கூறியிருப்பதாவது:ஒருவர் வழக்கில் வக்கீல்களை நியமிக்காமல், தாமாகவே ஆஜராகி வாதிட வேண்டுமென்றால், முதலில் அதற்கு அனுமதி கோரி மனு ஒன்றை அளிக்க வேண்டும். அந்த மனுவில் நோட்டரி வக்கீல் அல்லது நோட்டரி ஆணையர் கையெப்பம்  இட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் ஏன் வழக்கறிஞர்களை நியமிக்கவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இந்தநிலையில், வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் வக்கீல் ஒருவரை நியமிக்கும்பட்சத்தில் எந்தவித நிபந்தனையுமின்றி அதை வழக்கு தொடர்பவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். முகவரிக்காக புகைப்படத்துடன் கூடிய ஆதார் கார்டு,  ரேஷன் கார்டு, வங்கி கணக்கு அட்டையும். பேன் கார்டு, ஓட்டுனர் உரிமம், தற்போதுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கைப்பேசி எண், மின் அஞ்சல் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.

இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த குழு மனுவை விசாரித்து, வழக்கு தொடருபவர் ஆஜராகி வாதிடலாமா, இல்லையா என்று முடிவெடுக்கும். மேலும் மனு தாக்கல் செய்துள்ளவர் இலவசமாக சட்ட உதவி பெற தகுதி பெறும்  நபராக இருந்தால். இலவசமாக சட்ட உதவிகளை அளித்து வரும் வக்கீல்கள் மூலம் மனுவை தாக்கல் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் குழு மனுவை பரிசீலித்து ஒருவர் வாதிட அனுமதிக்கப்படும் பட்சத்தில் அந்த நபர் சட்ட  விதிகளுக்கு உட்பட்டு, நீதிமன்ற ஒழுக்கத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும். தகாதா வார்த்தைகளால் பேச கூடாது. இதுதொடர்பாக குழு அவர்களிடம் இருந்து உத்தரவாதம் பெற வேண்டும். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதேனும், வழக்கு தொடர்ந்தவர் மீது எடுத்தால், அதற்கு அபராதம் கட்ட முடியுமா, அல்லாத முன் பணமாக செலுத்த முடியுமா  என்பதையெல்லாம் குழு கேட்டறிந்து கொள்ள வேண்டும். என்று புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசிழில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் குறித்து, ஏற்கனவே வழக்குகளை தொடர்ந்து தனிநபராக வாதிட்டு வருபவர்கள் கூறுகையில்:வழக்கறிஞர்கள் இல்லாமல், தனிநபராக வழக்கு தொடர்ந்து வாதிடுபவர்கள் மிகவும் குறைவு. அவ்வாறு வாதிடுபவர்களில் பெரும்பாலானோர், அரசு, சட்டங்களுக்கு எதிராக செயல்படும் போதும், அரசு அலுவலர்கள் சரியாக செயல்படாத போது  பொதுநலன் கருதி வழக்கு தொடர்ந்து வாதிடுபவர்கள் தான். வழக்கறிஞர்களை போன்று வழக்கு தொடர்ந்து வாதிடுவோம். அதில் எந்த சிக்கலும் இருக்காது. தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளதால், ஒரு சில அவசர வழக்கு தொடர வேண்டும் என்றால்கூட உடனடியாக தாக்கல் செய்ய முடியாது. முதலில்  குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இப்படி அனுமதி பெறுவதற்காக மனு தாக்கல் செய்தால் அதனை குழு விசாரித்து பரிந்துரை செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. அதற்கு அந்த அவசர வழக்கு முடிவுக்கு வந்துவிடும்.  எனவே இந்த புதிய நடைமுறைகள் சற்றி சிக்கலையே ஏற்படுத்தியுள்ளது. என்று தெரிவிக்கின்றனர்.

Tags : lawyer ,committee , Restriction , Public Arbitration , lawyer, new committee
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...