×

பொதுப்பணித்துறையில் பணியாற்ற வருபவரின் நியமன ஆணையை ஆய்வு செய்ய வேண்டும் : முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் அறிவுரை

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில், இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் ேதர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.  ஆனால், சமீபகாலமாக இளநிலை உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுவதாக கூறி சமூக விரோதிகள் சிலர் போலி நியமன ஆணை தயார் செய்து இளைஞர்களிடம் லட்சக்கணக்கில்  பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு இளம்பெண் ஒருவர் போலி நியமன ஆணையுடன் வந்துள்ளார். அவரது ஆணையை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்த போது போலி  நியமன ஆணை என்பது தெரிய வந்தது. அவரிடம் ஊழியர்கள் விசாரணை நடத்திய போது இதே போன்று பலருக்கு பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய நியமன ஆணை தரப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டு பொதுப்பணித்துறை  ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் சார்பில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, நேரடி நியமனம் மூலம் ஆணையை கொண்டு  வந்தால் அதை ஏற்க வேண்டாம். இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஓட்ட வேண்டும். முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தின் மூலம் பணி மாறுதல் ஆணை மற்றும்  டிஎன்பிஎஸ்சி நியமன ஆணை கொண்டு வருபவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியே பிறகே பணியமர்த்த வேண்டும் என்று அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தற்போது போலி நியமன ஆணை மூலம் இளைஞர் பலர் பொதுப்பணித்துறையில் அலுவலகத்தில் சுற்றி வருவது துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Principal Chief Engineer ,Public Works Department ,Chief Chief Engineer , Public Works, Department,Chief ,Engineer's, Office, Advice
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...