×

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கடந்த 5 மாதத்தில் 225 டிஎம்சி நீர் திறப்பு: கூடுதலாக 80 டிஎம்சி கிடைத்தது

சென்னை: கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீராக கடந்த 5 மாதத்தில் 225 டிஎம்சி நீர் கர்நாடகா திறந்து விட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி 177 டிஎம்சி நீர் தர வேண்டும். இந்த தண்ணீர் முழுமையாக கர்நாடகா தந்ததில்லை. குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சியில் 2.06ம், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சியில் 7.44 டிஎம்சி மட்டுமே திறந்து  விடப்பட்டது. இது தொடர்பாக காவிரி ஆணையத்தில் கூட தமிழக அரசு புகார் அளித்தது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டிஎம்சியில் 92.33 டிஎம்சியும், 36.76 டிஎம்சியில் 71.90 டிஎம்சியும், அக்டோபரில் 20.22 டிஎம்சியில் 48.77 டிஎம்சியும் நீர் கர்நாடகா தந்துள்ளது. கடந்த 5 மாதத்தில் 144.7 டிஎம்சியில் 225 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட்டுள்ளது. கூடுதலாக 80.50 டிஎம்சி தமிழகத்துக்கு கர்நாடகா தந்துள்ளது. தொடர்ந்து நவம்பரில் 4ம் தேதி வரை 1.37 டிஎம்சியில் 2.81 டிஎம்சி  தந்துள்ளது. இந்த மாதத்தில் 13.78 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டும். இந்த மாதத்திலும் கூடுதல் டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Karnataka , From Karnataka, Tamil Nadu,additional , TMC ,available
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...