×

பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும்  என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ப்ளு ஹோல் நிறுவனத்தின் தயாரிப்பான பப்ஜி விளையாட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 20 மாதங்களில் குக்கிராமங்கள் வரை இந்த விளையாட்டு  பரவியிருக்கிறது. இந்த விளையாட்டு   மாணவர்களையும், இளைஞர்களையும் குரூரமான வெற்றி வீரர்களாக்கி, அடுத்தவர்களை அழித்தாவது வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்துவது தான். ஒருவர் களத்தில் உள்ள  அனைவரையும் சுட்டுக் கொலை செய்தால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இந்த விளையாட்டை விளையாடும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கொலைகளை செய்வது தான் சாதனை என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த உணர்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்கள்  அழிக்கும் சக்தியாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.ஏற்கனவே டிக்டாக் போன்ற இணைய செயலிகள் கலாச்சார சீர்கேட்டை விளைவிக்கின்றன. அதையே நம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், பப்ஜி போன்ற விளையாட்டுகளும் கட்டற்று அனுமதிக்கப்பட்டால் அதன் மோசமான  விளைவுகளை நம்மால் தாங்க முடியாது. எனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு–்ளளது.



Tags : Pabiji ,Ramadas ,state ,governments ,state governments , Pabiji, game ban, Ramadas
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்