×

தமிழக அரசியலில் வெற்றிடம் நடிகர் ரஜினி பரபரப்பு தகவல்

சென்னை: பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நடிகர் ரஜினி சென்ற விமானம் ஏறக்குறைய 3 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.பெங்களூருவில் நேற்று அதிகாலை திடீரென மூடுபனி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை 4.55 மணிக்கு பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கோவாவிலிருந்து அதிகாலை 5.15 மணிக்கு  பெங்களூரு சென்ற ஏர் இண்டியா விமானம், லண்டனில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூரு சென்ற பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம், டெல்லியில் நேற்று காலை 5.50 மணிக்கு பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்  ஆகிய 4 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் வானத்திலேயே  வட்டமடித்துக் கொண்டிருந்தன. பின்பு அந்த விமானங்கள், சென்னையில் நேற்று காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின. 5 விமானங்களிலும் 618 பயணிகள் இருந்தனர். பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் சிற்றுண்டி, காபி வழங்கின.  அதன் பின்பு 8 மணிக்கு மேல் வானிலை சீரடைந்ததும் நேற்று காலை 8.15 மணிக்கு 4 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூரு புறப்படுச்  சென்றன. அதேபோல் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 3 விமானங்களும்  தாமதமாகவே புறப்பட்டன.

இந்நிலையில் நடிகர் ரஜினி காலை 7.25 மணி விமானத்தில் பெங்களூரு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தாமதமானதால் அவர் 7.25 மணி  விமானத்திலிருந்து மாற்றப்பட்டு 8.25 மணி விமானத்தில் செல்ல மீண்டும் முன் பதிவு செய்யப்பட்டது ஆனால் அந்த விமானமும் தாமதமாகி காலை 10.17 மணிக்குதான் சென்னையிலிருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றது. நடிகர் ரஜினிகாந்த்  தாமதமாகவே பெங்களூரு சென்றார்.ரஜினி பேட்டி திருமணம் நிகழ்ச்சிக்கு பெங்களூரு சென்றுவிட்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் சென்னை வந்தார். அவரிடம் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறினீர்களே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு நடிகர்  ரஜினிகாந்த் பதில் அளிக்காமல் சிரித்தபடியே காரில் எறி சென்றுவிட்டார்.

Tags : Actor ,Rajini ,Tamil Nadu , Vacuum, Tamil Nadu ,politics, Actor Rajini
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...