×

வெப்ப சலனத்தால் மழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் உருவான புல்புல் புயல் மேற்கு வங்கம் அருகே நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்தது. இதனால் வங்கக் கடல் பகுதியில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  வெயில் நிலவுவதால் வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதனால், பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நேற்று, வேப்பூர் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடலாடி 80 மிமீ, சிட்டாம்பட்டி 70மிமீ, ஒகனேக்கல் 60 மிமீ,  விளாத்திக்குளம் 50மிமீ, மதுரை 40மிமீ, சமயபுரம் 30மிமீ, தக்கலை 20மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் நிலவியதால் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் தெற்கு மற்றும் வட உள்  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதவிர கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை  பெய்யும்.

Tags : ,raining ,heat
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...