×

ரவுடி கொலை வழக்கில் 5 வாலிபர்கள் சிறையிலடைப்பு

புழல்:  புழல் அடுத்த காரணோடை, கொசஸ்தலை ஆற்றின் அருகே உள்ள மாந்தோப்பில் கடந்த 5ம் தேதி இரவு 10 மணியளவில் ஒரு வாலிபர் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த வாலிபரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த வாலிபர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், இறந்த வாலிர் காரணோடை, சண்முகா நகரை சேர்ந்த ராஜகோபால் மேஸ்திரி என்பவரின் மகன் ராஜேஷ் (எ) குள்ள ராஜேஷ் (24) என்பதும், இவர்மீது சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, செயின் பறிப்பு, கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் கடந்த 8ம் தேதி இரவு சோழவரம் பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (22), விக்னேஸ்வரன் (21), கார்த்திக் (21), ராஜன் (22), சதீஷ் (எ) பாப்பா (21) ஆகிய 5 பேர், முன்விரோதம் காரணமாக ராஜேஷை கொலை செய்தது தெரிந்தது.

அவர்களை பிடித்து விசாரித்தபோது, கடந்த 5ம் தேதி இரவு காரணோடை, கொசஸ்தலை ஆற்றின் அருகே மாந்தோப்பில் நாங்கள் மது அருந்தியபோது, எங்களை குள்ள ராஜேஷ் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் நாங்கள் அவரை தீர்த்துக் கட்டினோம், என வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசாரையும் கைது செய்து நேற்று முன்தினம் இரவு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy ,youth jails , Rowdy killed, 5 youths jailed
× RELATED யானைகவுனி கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்ததால் விஜயகுமார் தற்கொலை