×

பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார மந்தநிலை: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கம் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்கும் நோக்கில் பழைய ₹500, ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பரில் அறிவித்தது. இதன்பிறகு புதிதாக ரூ500, ₹2,000 மற்றும் ₹200 நோட்டு வெளியிடப்பட்டன. எனினும் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு பணப்புழக்கம் குறைந்தது. இதுதொடர்பாக ஓர் அமைப்பு சமீபத்தில் சர்வே நடத்திய முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 33 சதவீதம் பேர், தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம்தான் காரணம் என தெரிவித்துள்ளனர். பணமதிப்பு நீக்கத்தால் முறைசாரா துறை சார்ந்தவர்களின் வருவாய் பாதித்தது என 32 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என 28 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அதோடு, ரூ500, ரூ1,000 போலி கரன்சி புழக்கம் ஒழிந்தது எனவும் சிலர் கூறியுள்ளனர் என ஆய்வு நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.



Tags : recession , Deflation, economic recession
× RELATED உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிர்மலா சீதாராமன் உரை