×

வரத்து 50 சதவீதம் சரிவு உளுந்து மூட்டைக்கு ரூ4,000 அதிகரிப்பு

சேலம்: வட மாநிலங்களில் இருந்து உளுந்து வரத்து சரிந்துள்ளதால், மூட்டைக்கு ரூ4,000 அதிகரித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் பெய்த கனமழையால் அங்கு உளுந்து பயிர்கள் தண்ணீர் மூழ்கின. இதன் காரணமாக அங்கிருந்து உளுந்து வரத்து 50 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மார்க்கெட்டுகளுக்கு, வடமாநிலங்களில் இருந்து தான் உளுந்து விற்பனைக்கு வருகிறது.

அங்கு மழையால் பயிர்கள் சேதம் அடைந்நதால் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 2 மாதம் முன்பு உளுந்து 100 கிலோ மூட்டை ₹9,000க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ4,000 உயர்ந்து ரூ13,000 ஆகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது உளுந்து விற்பனைக்கு வரும். அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை என்றனர்.

Tags : rupee increase , Bundle of wool, increase
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...