×

மெஸ்ஸி ஹாட்ரிக் அசத்தலில் பார்சிலோனா அபார வெற்றி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை வீழ்த்தியது. பார்சிலோனா அணி கேப்டன் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் போட்டு அசத்தினார் (23வது நிமிடம் பெனால்டி, 45’+1, 48வது நிமிடம்). பஸ்குவெட்ஸ் 85வது நிமிடத்தில் கோல் போட்டார். செல்டா விகோ சார்பில் ஒலாஸா 42வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார்.

லா லிகா தொடரில் மெஸ்ஸி 34வது முறையாக ஹாட்ரிக் கோல் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனா (25 புள்ளி), ரியல் மாட்ரிட் (25 புள்ளி), ரியல் சோசிடாட் (23 புள்ளி), அத்லெடிகோ மாட்ரிட் (21), செவில்லா (21) அணிகள் முதல் 5 இடங்களில் உள்ளன.


Tags : win ,Barcelona ,hat-trick ,Messi , Messi hat-trick, Barcelona
× RELATED மெஸ்ஸி அசத்தலில் பார்சிலோனா வெற்றி