×

பெடரேஷன் கோப்பை டென்னிஸ்: 3வது முறையாக பிரான்ஸ் சாம்பியன்

பெர்த்: பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. பெர்த் நகரில் நடந்த இந்த தொடரின் ஒற்றையர் ஆட்டங்களில் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்த நிலையில், பரபரப்பான இரட்டையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி - சமந்தா ஸ்டோசர் இணையுடன் பிரான்சின் கிறிஸ்டினா மிளாடெனோவிச் - கரோலின் கார்சியா ஜோடி மோதியது.

இதில் சிறப்பாக விளையாடிய மிளாடெனோவிச் - கார்சியா இணை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்றதை அடுத்து பிரான்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பெட் கோப்பையை 3வது முறையாக முத்தமிட்டது. அந்த அணி ஏற்கனவே 1997 மற்றும் 2003ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெடரேஷன் கோப்பையில் கடந்த 45 ஆண்டுகளாக பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வரும் ஆஸி. அணி இந்த முறையும் இறுதிப் போட்டியில் தோற்று 2வது இடம் பிடித்தது.

Tags : France ,Champion , Federation Cup Tennis, France Champion
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...