×

ஈரானில் கண்டுபிடிப்பு: 5,300 கோடி பேரல்கள் தரும் புதிய கச்சா எண்ணெய் கிணறு

டெஹ்ரான்:  உலகின் அதிக எண்ணெய் வளம் கொண்ட 4வது நாடாகவும், எரிவாயு ஏற்றுமதியில் 2வது நாடாகாவும் ஈரான் திகழ்கிறது. ஆனால், சமீபத்தில், ஈரானுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. மேலும், அந்நாடு தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்வதாக கூறி, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது.

இது பொருளாதார ரீதியில் ஈரானுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஈரானில் புதிதாக மிகப்பெரிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று அறிவித்துள்ளார். . 5,300 கோடி பேரல் கச்சா எண்ணெய் தரும் இந்த புதிய எண்ணெய் கிணறு, ஈரானின் தென்மேற்கு பிராந்தியமான குசெஸ்தானில் அமைந்துள்ளது.


Tags : Iran , Ira, the new crude oil well
× RELATED ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில்...