உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் அயோத்தியில் மக்கள் உற்சாகம்: பூக்கள் விற்பனை அமோகம்

அயோத்தியா: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் அயோத்தி மாநகரில் நேற்று மக்கள் உற்சாகமாக காணப்பட்டனர். அங்குள்ள அனுமன்கர்கி, நயா காட் ஆகிய பகுதிகளில் உள்ள ராமர் மற்றும் அனுமன் கோயில்களில் வழிபட பக்தர்கள் அதிகளவில் சென்றனர். அயோத்தி நகரில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால். எங்கு பார்த்தாலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப்பின், அயோத்தி மாநகர மக்கள் நேற்று உற்சாகமாக காணப்பட்டனர். ரிகாப்கஞ்ச் பகுதியில் செய்திதாள்களை வாங்கி தீர்ப்பின் விவரங்களை படிப்பதிலும், நாட்டின் பிற பகுதி மக்கள் எப்படி உணர்கின்றனர் என்பதை பார்க்கவும் ஆர்வம் காட்டினர்.

அனுமன்கர்கி, நயா காட் ஆகிய பகுதிகள் நேற்று காலை உற்சாகத்துடன் காணப்பட்டது. இங்குள்ள கோயில்களில் ராமர் மற்றும் அனுமனை வழிபட பக்தர்கள் அதிகளவில் சென்றனர். பூக்கள், மாலைகள் விற்கும் வியாபாரிகள் எல்லாம் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். வாரணாசி மற்றும் அருகில் உள்ள நகரங்களில்  இருந்து கூடுதல் மாலைகள் கொண்டு வர ஆர்டர் கொடுத்தனர். அணுமன்கர்கி கோயிலில் பிரசாதம் விற்கும் வியாபாரிகளும் உற்சாகத்துடன் செய்தி தாள்களை வாசித்துக் கொண்டிருந்தனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால், அயோத்திக்கு இனி பொன்னான எதிர்காலம் ஏற்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,Ayodhya , Supreme Court decision, Ayodhya
× RELATED மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடக்காததால் மக்கள் ஏமாற்றம்