×

ஜம்மு-ஸ்ரீநகர் சாலையில் நிலச்சரிவு

பனிஹால்: ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் மஹர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஏற்கனவே கடும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் போக்குவரத்து தொடங்கிய ஒரு மணி நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Jammu ,road ,Srinagar , Jammu-Srinagar, landslide
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!