×

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

நாக்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து144 ரன்கள் எடுத்து. 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.


Tags : team ,Indian ,Bangladesh , Bangladesh, T20 match, Indian team win
× RELATED ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட்...