×

ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பை அள்ளும் வாகனங்களை தரமானதாக மாற்ற வேண்டும்: துப்புரவு ஊழியர்கள் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் தரமானதாக இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தினமும் குப்பைகள் சேகரித்துக்கொண்டு செல்ல ரூ55.8 லட்சத்தில் பேட்டரியில் இயங்கும் 22 ஆட்டோக்கள் வாங்கப்பட்டது. இதில் 10 சிறிய புதிய ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றின் மூலம் நகராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நவல்பூரில் குப்பைகள் ஏற்றிச்சென்றபோது ஒரு ஆட்டோவின் அடிப்பகுதி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அதில் டிரைவராக இருந்த துப்புரவு தொழிலாளி கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த ஆட்டோவின் அடிப்பாகம் உறுதியான இரும்பால் தரமாக தயாரிக்கவில்லை எனத்தெரிகிறது. இதேபோல் பயன்பாட்டில் உள்ள மற்றும் 9 ஆட்டோக்களும் இதேபோல் உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த வாகனங்களை தரமாக மாற்ற அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் குப்பை அள்ளும் அனைத்து பேட்டரி வாகனங்களின் அடிப்பாகத்தையும் தரமானதாக மாற்றியமைக்கவேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்னனர்.

Tags : municipality ,Ranipet ,Cleaning ,Ranipet Municipality ,Cleaning Staff , Ranipetta, Garbage Vehicles, Cleaning Staff
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...