×

பொதுமக்கள் வழிபடும் மரத்தில் தோசை மாவு ஊற்றிய மர்ம நபர்கள்: பூதப்பாண்டி அருகே பரபரப்பு

பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே ஜீவாநகர் பகுதி விவசாய நிலங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு வசிக்கும் ஏராளமானோர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஒரு புங்க மரம் உள்ளது. இந்த மரத்தில் வழிவழியாக மக்கள் புங்க மரத்தில் மஞ்சணம் தடவி இசக்கி அம்மனாக பாவித்து வழிபட்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் பொது மக்கள், வயல் வேலைகளுக்கு செல்வோர் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்கின்றனர். அதுபோல செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்றிரவு அந்த மரத்தின் மேல் மர்ம நபர்கள்  தோசை மாவை ஊற்றி மஞ்சணத்தை மறைத்து சென்றுள்ளனர். இதை இன்று காலையில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதியை  சேர்ந்த மாசாணம் என்பவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில் எங்கள் மத நம்பிக்கையை குலைக்கும் வகையில் மர்ம நபர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். இது எங்களுக்கு கடும் மன வருத்தத்தை அளித்துள்ளது. எனவே இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெதரிவிள்ளார்.

Tags : public , Civilians, dosa flour, mystery figures, potpotti
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை...