×

நாக்பூரில் இன்று 3வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

நாக்பூர்: இந்தியா - வங்கதேசம் மோதும் 3வது டி20 போட்டி, நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. அடுத்து ராஜ்கோட்டில் நடந்த 2வது டி20ல் கேப்டன் ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி பதிலடி கொடுத்தது.

ரோகித் 85 ரன் (43 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி அசத்தினார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இதில் வென்று தொடரைக் கைப்பற்ற இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
இந்தியா: ரோகித் (கேப்டன்), கலீல் அகமது, சாஹல், தீபக் சாஹர், ராகுல் சாஹர், தவான், துபே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, குருணல் பாண்டியா, ரிஷப் பன்ட் (கீப்பர்), கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.

வங்கதேசம்: மகமதுல்லா (கேப்டன்), அபு ஹைதர், ஆபிப் உசேன், அல் அமின் உசேன், அமினுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், அராபத் சன்னி ஜூனியர், முகமது மிதுன், முகமது நயிம், மொசாடெக் உசேன், முஷ்பிகுர் ரகிம், முஸ்டாபிசுர் ரகுமான், ஷபியுல் இஸ்லாம், சவும்யா சர்க்கார், தைஜுல் இஸ்லாம்.

Tags : India ,Nagpur India ,series , In Nagpur today, the 3rd, T20 series, India initiative
× RELATED இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும்...