×

கட்சிகள், தலைவர்கள் வரவேற்பு

* இந்திய கம்யூ.: இந்த தீர்ப்பு ஒரு தரப்பினருக்கு மட்டும் கிடைத்த வெற்றியாக கருதக் கூடாது. தீர்ப்பின் சில பகுதிகள் கேள்விக்குரியதாக உள்ளது. 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்தை மீறிய செயலாகும்’ என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்.

* மார்க்சிஸ்ட் கம்யூ.: இந்த தீர்ப்பை மதசார்பின்மை, நீதி, நெறிமுறைகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இதை தனிப்பட்ட ஒரு கட்சிக்கோ, தரப்புக்கோ கிடைத்த வெற்றியாக பார்க்கக் கூடாது. இது அனைத்து தரப்பினரையும் சமரசப்படுத்தும் ஒரு தீர்ப்பாகும்.

* சரத்பவார் (தேசியவாத காங். தலைவர்): சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் நலனையும் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான, நீதித்துறையின் மைல்கல்லான இந்த தீர்ப்பை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* தேவகவுடா (மஜத தேசிய தலைவர்): இது சமநிலைப்படுத்தும் தீர்ப்பு என்பதால் இதனை வரவேற்கிறேன். இதை அனைவரும் ஏற்க வேண்டும். அனைவரும் இந்தியாவின் கொள்கைகளான அகிம்சை, அமைதி ஆகியவற்றை பின்பற்றி நடக்க வேண்டும். ராமர் கோயிலை கட்டி எழுப்புவதுடன் நமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பவும் உழைப்போம்.

* மாயாவதி (பகுஜன் சமாஜ் தலைவர்): சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் அண்ணல் அம்பேத்கர் வகுத்த மதசார்பற்ற அரசியலமைப்பின்படி உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். இது தொடர்பான அனைத்து எதிர்கால நடவடிக்கையும் இணக்கமான சூழலில் எடுக்கப்பட வேண்டும்.


Tags : Parties ,leaders , Parties, leaders, reception
× RELATED வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்கு அரசியல் கட்சியினர் உதவ வேண்டும்