×

அயோத்தி வழக்கு முழு நிறைவை தந்துள்ளது: அத்வானி பேட்டி

பாஜ மூத்த தலைவர் அத்வானி (92 வயது) அளித்த பேட்டியில், ‘‘அயோத்தி விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை என் நாட்டு மக்களுடன் இணைந்து நானும் முழு மனதோடு வரவேற்கிறேன். இந்த தருணம் எனக்கு முழு நிறைவை தந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் இயக்கத்தில் பங்களிப்பை தருவதான வாய்ப்பளித்து கடவுள் அருள் புரிந்துள்ளார். அயோத்தி பிரச்னை முடிந்து விட்டது. அனைத்து கசப்புணர்வும் விலகி, வகுப்புவாத ஒத்துழைப்பும், அமைதியும் மேம்பட வேண்டிய நேரம் வந்து விட்டது,’’ என்றார்.

Tags : Ayodhya case, full mass, Advani, interview
× RELATED அயோத்தி நில வழக்கில் அக்.17-ம்...