×

அடுத்த தலாய்லாமா நியமிக்க சீனாவை அனுமதிக்க கூடாது: ஐநா.வுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: அடுத்த தலாய்லாமா யார் என்ற விவகாரத்தை ஐநா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தூதர் சாம் பிரான்பேக் கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் புத்த மதத்தலைவரான தலாய் லாமா (84) இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த தலாய்லாமாவை தேர்ந்ெதடுக்க தீவிரம் காட்டி வருகிறார். தனது வாரிசாக ஒரு சிறுமியை தேர்ந்ெதடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அல்லது தானே கடைசி தலாய்லாமாவாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், சர்வதேச மத சுதந்திரத்திற்காக அமெரிக்க தூதர் சாம்பிரான்பேக் சமீபத்தில் தர்மசாலாவில் தலாய்லாமாவை சந்தித்து பேசினார். வாஷிங்டன் திரும்பிய சாம் பிரான்பேக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திபெத் புத்தமத தலைவரின் அடுத்த வாரிசை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் எங்களை கலந்து ஆலோசிக்காமல் செயல்படக் கூடாது என்று சீனா எச்சரித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சர்வதேச அமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம்.

எனவே, இந்த விவகாரத்தை ஐநா எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அடுத்த தலாய்லாமாவை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடை செய்ய முன்வந்தால் சர்வதேச நாடுகள் அதற்கு எதிராக ஐநா.வில் குரல் எழுப்ப முடியும். எனவே, இது தொடர்பாக சர்வதேச நாடுகள் முன்கூட்டியே ஆலோசனையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : China ,US ,UN ,Dalai Lama , Next Dalai Lama, Appoint, China, Do Not Allow, UN, US, Insist
× RELATED சீனாவை கண்காணிக்க அமெரிக்க டிரோன்கள்: வாடகைக்கு எடுத்தது இந்தியா