×

கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் கோவை முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், கரூரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் அரியலூருக்கும், அரியலூர் அதிகாரி அப்பண்ணன் கோவைக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் தஞ்சாவூர் சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலர் ரோஸ்நிர்மலா, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் அந்த பணியில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்யாததால் பள்ளிக் கல்வி பணி விதிகளில் தளர்வு செய்தும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சட்டம் 2016ன் கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்தில் தற்காலிகமாக நியமிக்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட மதிவாணன் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார்.

Tags : Education Officers , Education Officer, Promotion and Promotion
× RELATED பழைய புத்தகங்களை மாணவர்களிடம்...