×

சென்னை மாணவர்களுக்கு அரசு தற்காப்புக் கலை பயிற்சி

சென்னை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் தற்காப்புக் கலை பயிற்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில்உள்ள 86 நடுநிலைப் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியம், வலிமையான உடல், தன்னம்பிக்கை மற்றும் சுய பாதுகாப்பு ஆகிய பயிற்சிகள் அவசியம் என்பதை வலியுறுத்தி தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படுகிறது. தற்காப்புக் கலை பயிற்சியை சென்னை மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அனிதா தொடங்கி வைத்தார்.

தற்காப்புக் கலை பயிற்சி ஒரு வாரத்துக்கு இரண்டு வகுப்புகள் வீதம், தகுதி உள்ள பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. மொத்தம் 2,434 மாணவ, மாணவிகள் இந்த பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர். பயிற்சி நடைபெறும் நாட்களில் உதவி திட்ட அலுவலர் காமராஜ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் பார்வையிட்டு, மாணவ-மாணவிகளுக்கு தேவைப்படுகின்ற வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.


Tags : Madras student, government, martial arts training
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...