×

காஞ்சிபுரம் மாவட்ட தடகள போட்டிகள்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடத்திய இந்தப் போட்டியில், 900க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். மொத்தம் 48 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநில அளவிலான போட்டிக்கு தயார்படுத்தப்பட்ட இந்தப் போட்டியின் யு17 பிரிவில், 800 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பூஜா முதல் இடத்தையும், பரங்கிமலையை சேர்ந்த பவித்ரா 2வது இடத்தையும், துரைப்பாக்கத்தை சேர்ந்த லோகேஸ்வரி 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதே பிரிவின் 3,000 மீட்டர் ஓட்டத்தில் துரைப்பாக்கம் லோகேஸ்வரி முதல் இடத்தையும், செங்கல்பட்டு மலர் 2வது இடத்தையும், செங்கல்பட்டு ஹர்ஷினி 3வது இடத்தையும் பெற்றனர். யு19 பிரிவின் உயரம் தாண்டுதலில் கல்பாக்கம் காயத்ரி முதல் இடத்தையும், என்சிசி கேம்பஸ் ஜெர்லின் பேரி 2வது இடத்தையும், துரைப்பக்கம் ராஜலட்சுமி 3வது இடத்தையும் வென்றனர். மும்முறை நீளம் தாண்டுதலில் துரைப்பாக்கம் புவனேஸ்வரி முதல் இடத்தையும், செம்பாக்கம் சுவாதி 2வது இடத்தையும், கல்பாக்கம் காயத்ரி 3வது இடத்தையும் பிடித்தனர்.

நீளம் தாண்டுதலில் பழவேஸ்வரம் தர்ஷினி முதல் இடத்தையும், பாலவாக்கம் சுஸ்மிதா 2வது இடத்தையும், தாம்பரம் திவ்வியஸ்ரீ 3வது இடத்தையும் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

Tags : Kanchipuram District Athletics Competition , Kanchipuram District, Athletics, Competitions
× RELATED சிட்னியில் முதல் ஒரு நாள் போட்டி;...