×

காஞ்சி மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான த்ரோபால்

திருப்போரூர்: மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக, மாவட்ட மாணவிகள் அணியை தேர்வு செய்வதற்காக, பள்ளிகளுக்கு
இடையிலான த்ரோபால் போட்டி, மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில், கேளம்பாக்கம், கோவளம், கல்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள 36 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டிக்கு நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சேரன் தலைமை தாங்க, நெம்மேலி பள்ளி உடற்கல்வி அலுவலர் எஸ்.லிவிங்ஸ்டன், உதவி உடற்கல்வி அலுவலர் டி.துரைராஜ், ஓவிய ஆசிரியர் என்.டி.சேகர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் உடற்கல்வி ஆய்வாளர் விசுவநாதன், எறிபந்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ள மாணவிகளை தேர்வு செய்து உள்ளனர். அவர்களில் இருந்து 15 பேர் கொண்ட அணி விரைவில் அறிவிக்கப்படும்.


Tags : Kanchi ,District School Students ,Throopal , Kanchi District, School Student, Thrombal
× RELATED திருப்பதியில் காஞ்சி பீடாதிபதி சுவாமி தரிசனம்