×

தீர்ப்பின் 7 சிறப்பு அம்சங்கள்: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, 1045 பக்கங்கள் கொண்டது. அதில், நீதிபதிகள் கூறியுள்ள 7 முக்கிய அம்சங்கள் வருமாறு

* ஷியா அமைப்பின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஷியா வக்பு வாரியத்தைப் பொறுத்தவரையில் சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் பாபரால் இந்த மசூதி கட்டப்படவில்லை. அவரது தளபதிகளில் ஒருவரான ஷியா பிரிவை சேர்ந்தவராலேயே  இந்த மசூதி கட்டப்பட்டது என்கிற வாதத்தை முன்வைத்திருந்தது. இதை நீதிபதிகள் ஏற்காததால் அவர்களின் வாதம் நிரூபிக்கப்படவில்லை. இதனால், நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

* அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரும் நிர்மோகி அகார மனுவில் உண்மை மற்றும் ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்களும் இதை நிரூபிக்கவில்லை .மேலும், அங்கு அவர்களுக்கு வழிபாட்டு உரிமை இருந்ததாக வரலாற்று  ரீதியான எந்த ஆதாரமும் இல்லை. அதனால், நிலத்திற்கு உரிமை கோரும் உரிமை நிர்மோகி அகார அமைப்பிற்கும் இல்லை என்ற இரண்டு முக்கிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.3இஸ்லாமியர்கள் சர்ச்சைக்குரிய அந்த நிலத்தின்  உட்பகுதியில் தொழுகை செய்து வந்தது நிருபணம் ஆகியுள்ளது. இதில், ராமர் கோயில் தடங்கலாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் உள்பக்கத்தில் தொழுகை நடத்தி வந்துள்ளனர். இது பல காலமாக நீடித்து வந்து இருக்கிறது. இருப்பினும்,  அவர்கள் மசூதியை விட்டு செல்லவில்லை என்றும் நிரூபணம் ஆகியுள்ளது.

* இன்னொரு பக்கம் இந்துக்கள், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உட்பகுதியில் தான் ராமர் பிறந்ததாக நம்புகிறார்கள். அந்த இடத்தின் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். அங்கு இரண்டு வழிபாடும் நடந்துள்ளது.  தனியாக இஸ்லாமிய வழிபாடு நடந்தது என்றும் கூற முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

* 1992ல் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கிறது. இது சட்ட விதிப்படி தவறு. விதியை மீறி இந்த செயலை செய்து இருக்கிறார்கள். இதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

* 1949ம் ஆண்டு விதியை மீறி மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்ட போது வெளியே கலவரம் ஏற்பட்டது. இது சட்ட விதிகளுக்கு முரணானது என நீதிமன்றம் கண்டித்தது.

* அலகாபாத் நீதிமன்றம் அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு. ஷியா அமைப்பிற்கு நிலம் வழங்கியதை ஏற்க முடியாது. நிலத்தை சட்ட ரீதியாக மட்டுமே பிரித்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது.  இதுவும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு முக்கிய காரணம்.

தீர்ப்புக்கு வழி வகுத்ததொல்லியல் அறிக்கை
அயோத்தி வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கைதான் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில், ‘கடந்த 2003ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல்  துறை தரப்பில் பிரச்னைக்குரிய இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் இந்து முறைப்படி ராமர் கோயில் இருந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன,’ என கூறப்பட்டு இருந்தது. இதன் அறிக்கையே, அயோத்தி  வழக்கு தீர்ப்பில் முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. தொல்லியல் துறையின் அறிக்கையை தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் முக்கியமான ஆதாரமாக குறிப்பிட்டுள்ளனர்.

கோகாய்க்கு இசட் பிளஸ்நீதிபதிகளுக்கு பாதுகாப்பு
அயோத்தி நில வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. இது நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்புகளில் ஒன்றாகும்.  அதேப்போல், இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற மூத்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நசீர் ஆகியோர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சமரச குழு தோல்வி
அயோத்தி நில பிரச்னையை தீர்ப்பதற்காக மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதில், ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ..ரவிசங்கர், வழக்கறிஞர்  ராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால், 2 மாதம் விசாரித்த இந்த குழு, கடந்த ஜூலை 3ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், ‘அயோத்தி நில பிரச்சனை விவகாரத்தில் 70 சதவீதம் மட்டுமே பேச்சுவாரத்தை நடத்த முடிந்தது.  வழக்கில் தொடர்பு உள்ளவர்கள் இடையே  எங்களால் முழுமையாக சமரசம் செய்ய முடியவில்லை. அதனால், மேற்கொண்டு எந்த முயற்சியையும் தொடர இயலாது. இதில் மூன்றாவது நபரின் தலையீடு உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்,’ என  குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, சமரச குழுவின் சமரச முயற்சி தோல்வி அடைந்ததாக கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

வரைபடம் கிழிப்பு
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “அயோத்தி மீள்வருகை” என்ற தலைப்பிட்ட ஆங்கில நூலை ஆதாரம் காட்டி தனது வாதத்தை  தொடங்கினார். இதற்கு சன்னி வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘நான் அந்த நூலை ஆதாரத்துக்கு முன்வைக்கப் போவது  இல்லை. அதில் இணைக்கப்பட்டுள்ள ராமர் பிறந்த இடம் தொடர்பான வரைபடத்தையும், சில பக்கங்களையும் மட்டுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன்,’ என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜீவ் தவான், அந்த வரைபடம்  கொண்ட பக்கங்களை துண்டு, துண்டாக கிழித்து நீதிமன்ற விசாரணை அறையின் உள்ளேயே வீசினார். இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் எச்சரிக்கை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Judgment: The Supreme Court ,judges , 7 Highlights, Judgment:, 1045 page, stated
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...