×

பெண் ஆசையில் வந்தவரை அடித்து உதைத்து பணம் பறிப்பு: பெண் வேடமிட்டு செயல்பட்ட 3 கல்லூரி மாணவர்கள், பட்டதாரி கைது

கோவை: கோவையில் உல்லாசத்திற்கு பெண்ணை தேடி வந்தவரை பெண், திருநங்கைபோல் வேடமிட்டு தாக்கிய 4 பேரை கைது செய்தனர்.  கோவை வி.கே.கே. மேனன் ரோட்டை சேர்ந்த 42 வயதான தனியார் நிறுவன ஊழியர், உல்லாசமாக இருக்க வெப்சைட்டில் அழகான பெண்களை ேதடினார். இதில் அழகான பெண் போட்டோ பதிவில் இருந்து, ‘‘காந்திபுரத்தில் சந்திக்கலாம்,  தனியான இடத்திற்கு சென்றால் உல்லாசமாக இருக்கலாம், எனக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம்’’ என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை பார்த்த அவர், வி.கே.கே. மேனன் ரோட்டில் பேக்கரி முன் காத்திருக்கிறேன், சீக்கிரம் வா என பதில் தெரிவித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை ஆவலுடன் அங்கு காத்திருந்தார். அப்போது சுடிதார், லோ ஹிப் சாரி அணிந்து, லிப்ஸ்டிக்  பூசி பெண்கள், திருநங்கை போல வேடமிட்டு 4 பேர் வந்தனர். ஊழியர் கூறிய அடையாளத்தை வைத்து அவரை 4 பேரும் சிரித்தபடி அழைத்தனர். அவர்களின் முகத்தை பார்த்தால் பெண்போல் இல்லையென சந்தேகமடைந்தார். இதனால்,  அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக முயன்றார்.  

அதற்குள், 4 பேரும் ஊழியரை சுற்றி வளைத்து பாக்ெகட்டில் கைவிட்டு பணத்தை பறிக்க முயன்றனர். தடுக்க முயன்ற அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை  பொதுமக்கள் பார்த்து, காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருச்சி மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்த அரவிந்தகுமார் (25), 2ம் ஆண்டு பி.ஏ. படிக்கும் கலைசெல்வன் (20), கணபதி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முதல் ஆண்டு இளநிலை படிக்கும் மாணவர் கவுரிசங்கர் (21),  டிப்ளமோ படித்த சேலம் அண்ணா நகரை சேர்ந்த நவீன்குமார் (23) என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் சொகுசு, ஜாலி வாழ்க்கை வாழவும், வேலைக்கு செல்லாமல் பணம் சம்பாதிக்கவும் ஆசைப்பட்டு ஆன்லைனில் பெண் படம் போட்டு ஆண்களை வரவைத்தனர். மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அழகான பெண்கள் படம்  போட்டுள்ளனர். இதை பார்த்து வருபவர்களிடம் பெண்கள், திருநங்கை வேடமிட்டு பணம் பறித்து வந்துள்ளனர். பெண் ஆசையில் பணம் இழந்தவர்கள் இந்த விவரங்களை வெளியே தெரிவிக்காமல் இருப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி இதை  தொடர்ந்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : college students , Woman Kicking , Money,college students, graduate ,arrested
× RELATED கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி