×

சீர்காழி அருகே கூட்டு பலாத்காரம் செய்து மாணவி கொடுர கொலை

சீர்காழி: சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு வடக்கு தெருவில் வசிப்பவர் தமிழரசன். இவரது மகள் ஆஷிகா (15), இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி  முடிந்து வீட்டுக்கு வந்த ஆஷிகா வீட்டின் கொல்லைபுரத்திற்கு சென்றவர்  நீண்ட நேரம் வரை வீட்டுக்கு விரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் வீட்டின் கொல்லைப்புறத்திற்கு சென்று பார்த்தபோது ஆஷிகா உடலில்  காயத்துடன் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி வந்தனா மற்றும் திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கிடந்த ஆஷிகா உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,  ஆஷிகா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்த கொலையை பார்க்கும்போது 2 அல்லது 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து இருக்க வேண்டும்.  இதில்தான் மரணமடைந்து இருக்கலாம் என்று கூறினார்.


Tags : rape ,murder ,Sirkazhi Student of Near Sirkazhi Collective , Sirkazhi, Collective rape,murder , student
× RELATED பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு...