×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்:  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 7,890 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேவேளை, காவிரி டெல்டா  மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால், பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 600 கனஅடியாக நீர்திறப்பு நேற்று காலை 750  கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. வரத்தை விட, திறக்கப்படும் நீரின் அளவு அதிகளவில் உள்ளதால், நீர்மட்டம் 119.13 அடியாக சரிந்துள்ளது.Tags : Mettur Dam , Increased ,water supply, Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு