×

கனமழையால் காட்டாற்று வெள்ளம் சதுரகிரியில் தவிக்கும் 200 பக்தர்கள்

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து ஓரளவு குறைந்த பின்பு  நேற்று காலை 8.30 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட்டியிலிருந்து சனி பிரதோஷத்தையொட்டி மலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 200க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

நேற்று மாலை கோயில் பகுதி, பிளவக்கல் அணை பகுதி உள்ளிட்ட கன மழை சூழல் இருந்ததால் கோயிலிருந்து பக்தர்கள் யாரும் இறங்க அனுமதிக்கப்படவில்லை. 5.45 மணியளவில் சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் கனமழை  ஆரம்பித்தது. இதனால் நீரோடைகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 200க்கும் மேற்பட்டோர் மலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீர்வரத்து குறைந்த பின்பே பக்தர்கள் இறங்குவதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சங்கிலிப்பாறை பகுதியில்  சுமார் 40பேர் சிக்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் 18 பேர் அங்கே சென்றுள்ளனர்.



Tags : pilgrims , Stuck , square, 200 pilgrims கனமழையால் காட்டாற்று வெள்ளம் சதுரகிரியில் தவிக்கும் 200 பக்தர்கள்
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்