×

9.50 லட்சம் கூடுதல் வரி கட்டியதால் நடிகர் பிரித்விராஜ் சொகுசு கார் பதிவு

திருவனந்தபுரம்: நடிகர்  பிரித்விராஜின் காருக்கு கூடுதலாக 9.54 லட்சம் வரி கட்டியதை தொடர்ந்து,  கொச்சி மோட்டார்  போக்குவரத்துத்துறை அதிகாரிகள் காரை பதிவு செய்து கொடுத்தனர்.மலையாள   சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ்.  அடிக்கடி புதிய சொகுசு கார்களை வாங்குவது வழக்கம். சமீபத்தில் இவர் 1.64 கோடி மதிப்புள்ள  சொகுசு காரை  வாங்கினார். அந்த காரை பதிவு  செய்வதற்காக வாகன நிறுவனத்தினர்  கொச்சி  மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஆன்-லைனில் பதிவு செய்தனர்.  அப்போது  காரின் விலையை குறைத்து 1.34 கோடி என்று குறிப்பிட்டிருந்தனர்.   

ஆனால்  உண்மையான மதிப்பு 1.64  ேகாடி என்பது மோட்டார் போக்குவரத்துத்துறை   அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பதிவு செய்ய அதிகாரிகள்  மறுத்து விட்டனர். விலையை குறைத்து காட்டியபோது முதலில் 42 லட்சத்து 42  ஆயிரம் வரி  கட்டப்பட்டிருந்தது.இந்த நிலையில் ₹9.54 லட்சம்  கூடுதலாக வரி கட்டினால் மட்டுமே காரை பதிவு செய்ய  முடியும் என அதிகாரிகள்  தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நடிகர் பிரித்விராஜ் கூடுதலாக ₹9  லட்சத்து 54 ஆயிரத்து 350 கட்டினார்.   இதைத்தொடர்ந்து கொச்சி மோட்டார்   போக்குவரத்துத்துறை அதிகாரிகள் காரை பதிவு செய்து கொடுத்தனர்.

Tags : Actor ,Prithviraj Luxury Car , 9.50 lakh ,tax due, Actor Prithviraj ,Luxury Car ,Registration
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...