×

கேரள வனத்துறையில் யானை தாக்கி இறந்த ஊழியருக்கு பணி நிரந்தர உத்தரவு

திருவனந்தபுரம்:  கேரள  மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர்  முத்துசாமி மகன் நாகராஜன்(46). இவர் மூணாறு வனச்சரகத்துக்கு உட்பட்ட  சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் தற்காலிக காவலாளியாக  பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் காட்டு யானை தாக்கியதில் ஒரு மாத சிகிச்சை பலனளிக்காமல்  இறந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தற்காலிக ஊழியர்களை பணி  நிரந்தரமாக்கி, ஒரு அரசு உத்தரவு வெளியானது.  கூடுதல் தலைமை செயலாளர் ஆஷா  தாமஸ் வெளியிட்ட அந்த உத்தரவில், கடந்த ஆண்டு இறந்த நாகராஜன் பெயரும்  இடம் பெற்றுள்ளது. யானை தாக்கி இறந்த தற்காலிக ஊழியருக்கு 325  நாட்கள் கழிந்து பணி நிரந்தர உத்தரவு  வந்துள்ளது. ஒரு ஊழியர் இறந்தது கூட  தெரியாமல், அரசு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது.


Tags : Kerala Forest Department ,Investigation Department of the Forest Department of Elephant , Kerala ,Forest Department, elephant attacked,work
× RELATED கேரள வனத்துறை அலட்சியத்தால் 2...