×

பைக் திருடிய வாலிபர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு வஉசி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மனோஜ் (50). இவர், கடந்த 7ம் தேதி இரவு தனது பைக்கை, வழக்கம்போல் வீட்டின் முன் நிறுத்திவிட்டு, தூங்க சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவரது  பைக் மாயமானது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக் பதிவு எண்ணை  வைத்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில், மனோஜின் மகன் நேற்று காலை பேசின் பிரிட்ஜ் பகுதியில் நடந்து சென்றபோது,  திருடுபோன தனது தந்தையின் பைக்கை, வாலிபர் ஒருவர் ஓட்டிச் செல்வதை பார்த்தார்.

உடனே, அவ்வழியே வந்த வாகன ஓட்டி உதவியுடன் அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து  போலீசில் ஒப்படைத்தார்.  விசாரணையில்   வியாசர்பாடி ஏ கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (19) என்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் மனோஜின் பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார், ஆண்ட்ரூசை கைது செய்தனர்.

Tags : Youth, arrested,stealing ,bike
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது