×

கடலில் மூழ்கிய மாணவன் சடலம் கரை ஒதுங்கியது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரை சேர்ந்த தினேஷ்குமார் (16), ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு சக  நண்பர்களுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலில் குளித்தார். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி தினேஷ்குமார் மாயமானார். தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கடலில் மாயமான மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால்,  கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் மாணவனின் உடல் கரை ஒதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், மாணவன் தினேஷ்குமார் உடலை கைப்பற்றி, பிரேத  பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags : drowning student , student drowned ,sea,shore
× RELATED திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த...