×

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவது எப்படி?

* கருக்கலைப்பு மையங்கள் முக்கிய பங்கு * சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.தமிழகத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2016ல் விழுப்புரத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 1000 ஆண்களுக்கு 909 என்ற விகிதத்தில் இருந்தது. இந்த எண்ணிக்கை இந்த  ஆண்டு 881 ஆக குறைந்துள்ளது. ராமநாதபுரம், திருவள்ளூர், அரியலூர் மாவட்டங்களில் இந்த விகிதம் பெரிய அளவில் குறையவில்லை என்றாலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளது  தெரியவந்துள்ளது. கருவிலேயே குழந்தைகள் அடையாளம் காணுவதும் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. கருவில் குழந்தை பெண்ணாக இருப்பது தெரிய வந்தால் அதை கலைக்க சட்டவிரோத மையங்கள் பல செயல்பட்டு வருவதும்  தெரியவந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் 5 சதவீத பெண் சிசுக்கள் கருவிலேயே கொலை செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எந்த விதமான பொருட்களைக் கொடுத்து கருக்கலைப்பு செய்கிறார்கள் என்பது குறித்து தெளிவான விபரங்கள்  தெரியவில்லை என்று சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் சென்னை, கோவை மாநகரங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கருவில் இருக்கும் குழந்தையை தெரிந்துகொள்ள பல அருகில் உள்ள மாவட்டங்களில் இருக்கும்  சட்டவிரோதமாக செயல்படும் மையங்களுக்கு செல்வதும் அதிகரித்துள்ளது.இதுபோன்று குழந்தைகளின் இனத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் குற்றத்திற்கு கடுமையான தண்டனை உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விழுப்புரத்தில்  இதுபோன்ற 2 சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய சுகாதார மிஷன் திட்டத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 5 போலி மருத்துவர்கள் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் ஏன் ஆண் குழந்தைகளை மட்டும் தேர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரி  ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுபோன்ற சட்டவிரோத செயல்களால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வரும் காலத்தில் வெகுவாக குறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



Tags : districts ,girls ,India ,Tamil Nadu , 8 districts , Tamil Nadu,number , girls?
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று...