×

கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் தீபாவளிக்கு இலக்கு 130 கோடி கிடைத்தது 85 கோடி வருவாய்

* கடந்தாண்டை காட்டிலும் 35 கோடி குறைவு
* நிர்வாக குளறுபடி என ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் தீபாவளி பண்டிகையையொட்டி 85 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 35 கோடி குறைவு என்று கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் வருவாய்  இலக்கை அடைவது சிரமம் என்று கோஆப்டெக்ஸ் ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.தமிழகத்தில் 168 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளது. இதன் மூலம் பருத்தி, பட்டு சேலைகள், வேட்டி, சட்டை, போர்வை, தலையணை உறைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் ஜவுளி பொருட்கள் விற்பனைக்காக  வைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இதற்காக, கோஆப்டெக்ஸ் நிர்வாகம் மூலம் விற்பனையை அதிகரிக்கும் வகையில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இந்தாண்டு ₹130 கோடி தீபாவளி பண்டிகையை ஒட்டி வருவாய் இலக்கு  நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதை அடையும் வகையில் வேட்டி, சட்டை, சேலை பல ரகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

ஆனால், கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் பல்வேறு அரசு துறைகளை தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிவிப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கோ  ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் வெறிச்சோடி கிடந்தது. இதனால், கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் இந்தாண்டு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்தாண்டுகளில் விற்பனை நிலையங்கள்  மூலம் 115 கோடி வருவாய் ஈட்டப்பட்டு வந்தது.ஆனால், இந்தாண்டு கடந்த நவம்பர் 3ம் தேதி வரை 85 கோடி மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்தாண்டை காட்டிலும் 35 கோடி குறைவு என்று கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்து இந்தாண்டு 350 கோடி வருவாய் இலக்கை  அடைவதே சிரமம் என்று ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.இது குறித்து ஊழியர்கள் சிலர் கூறும் போது, ‘தீபாவளி பண்டிகை ஒட்டி கோ ஆப்டெக்ஸ் தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை தொடர்பாக அரசு அலுவலர்களிடமாவது விழிப்புணர்வு செய்திருந்தால் 130 ேகாடி வருவாயை  எட்டியிருக்கும். ஆனால், கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே ₹85 கோடி குறைவாக வருவாய் எட்டப்பட்டு உள்ளது. மேலும், ஓய்ஆர்பி ரக சேலை ஒன்று 550க்கு விற்கப்படுகிறது. இந்த  சேலை கடந்தாண்டு 50 ஆயிரம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு  10 ஆயிரம் சேலை தான் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவும், விற்பனைக்கு சரிவுக்கு காரணம்’ என்றனர்.கோஆப்டெக்ஸ் தள்ளுபடி விற்பனை தொடர்பாக அரசு அலுவலர்களிடம் விழிப்புணர்வு செய்திருந்தால் ₹130 ேகாடி வருவாயைஎட்டியிருக்கும்.



Tags : Diwali ,Apex , Through Go Apex, outlets,crore, ,85 crore
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...