×

பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்

சென்னை: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவமும் 1 லட்சம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டனர். சென்னையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி சென்னை மண்டலத்தில் 750  போலீசாரும், திருச்சி மண்டலத்தில் 850 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : process , security, 15 thousand cops
× RELATED வாரவிடுமுறையில் பாரபட்சம் ஆயுதப்படை போலீசார் ஏமாற்றம்