×

மிலாது நபி முன்னிட்டு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மிலாது நபியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.எடப்பாடி பழனிசாமி (முதல்வர்): நபிகள் நாயகம் பிறந்த தினமான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த  நல்வாழ்த்துகள். இறைத்தூதர் நபிகள் நாயகம்  போதனைகளை மனதில்  நிறுத்தி, மக்கள் நற்சிந்தனையுடன் அறவழியை பின்பற்றி வாழ்ந்திடல் வேண்டும். உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து, சகோதரத்துவம் தழைத்திட வேண்டுமராமதாஸ் ( பாமக நிறுவனர்): இஸ்லாமிய தீர்க்கதரிசி நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும்  உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு  வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள்  நாயகம் போதனைகளை  கடைபிடிக்க இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): எதிலும் ஒரு புது மாதிரி, எல்லோர்க்கும் முன்மாதிரி, வாழும்போதே வரலாறு ஆனவர் அண்ணல் நபி. தன் வாழ்நாளிலேயே தலைகீழ் மாற்றங்களைக் கண்ட பெருந்தகை முஹம்மது நபி பிறந்தநாள்  மகிழ்ச்சி நிறைந்த பெருமங்கல நன்நாளில் இஸ்லாமிய சகோதரர் - சகோதரிகளுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நபித் திருநாள் நல்வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நன்னாளான மிலாது நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும்,  எனது உளம் கனிந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Prophet ,Milat Prophet ,leaders ,Milad CM , Prophet , Milad, CM, greet ,leaders
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...