×

சசிகலாவின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைகிறார்

சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுக பெரும் சரிவை சந்திக்க தொடங்கியது. டிடிவி.தினகரன் மேல் அதிருப்தி தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட  பெரும்பாலானோர் அதிமுக கட்சிக்கே மீண்டும் திரும்பி சென்றுவிட்டனர். அமமுக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்திக்காமல், அவர்களின் கோரிக்கைகளை கேட்காமல் டிடிவி.தினகரன் மெத்தனப்போக்கோடு செயல்படுவதே  கட்சியினரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு காரணம் என புகார் எழுந்தது.சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த புகழேந்தியும் டிடிவி.தினகரன் மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இந்த தகவல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரும்  மீண்டும் அதிமுக கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது.இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அவர் அதிமுகவில் இணைந்து விட்டார் என்ேற கூறப்பட்டது. ஆனால்,  முதல்வரை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூற வந்தேன் என்று கூறியதுடன், தற்போது தினகரன் காணாமல் போய்விட்டார். சமீபத்தில் அதிமுக பெற்ற வெற்றி பெரிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. நான் இப்போது எந்த கட்சியிலும்  சேரவில்லை. விரைவில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பேன்” என்று கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சேலத்தில் ரெடிசன் ஓட்டலில் இன்று புகழேந்தி பங்கேற்கும் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதற்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டரில், “மாங்கனி நகரில் மாறுதல் காண்போம். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றவும் வருகை தரும் புகழேந்தி” என்று கூறப்பட்டுள்ளது.அதனால் அமமுகவுக்கு எதிராகவே, போட்டி அமமுக கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறுவதாகவே அக்கட்சி தொண்டர்கள் கூறுகிறார்கள். புகழேந்தி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் டிடிவி.தினகரனுக்கு எதிராக சில அதிரடி  தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், புகழேந்தி தலைமையில் அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக மீண்டும் அதிமுக கட்சியில் இணைவது பற்றி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.Tags : AIADMK ,supporter ,Sasikala , supporter , Sasikala, Prasanthi ,e AIADMK
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறையில் அடைப்பு