×

மிலாது நபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: மிலாது நபி தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:10ம் தேதி(இன்று) மிலாது நபி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை  விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள். எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள். எப்எல்3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏஏ)மற்றும் எப்எல்11 உரிமம் கொண்ட பார்கள்அனைத்தும்  கண்டிப்பாக  மூடப்பட்டு இருக்க வேண்டும். இன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால். மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Holidays ,task force shops ,announcement ,Prophet ,Collector ,Task Shops ,Milatu , Milatu prefers, Prophet's Day,Task Shops
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...