×

`சர்வதேச போட்டியில் சாதிக்க கைகொடுங்கள்’..மலேசியா செல்ல நிதியின்றி வாடும் மாணவன்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பள்ளி மாணவன் மலேசியாவில் நடக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்குபெற தகுதி பெற்றும் நிதியில்லாமல் தவித்து வருகிறான். அவருக்கு அரசு உதவி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆரோன் ஜெபஸ். இவர் இந்தியா அளவில் பல்வேறு கராத்தே போட்டியில் பங்குபெற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். தற்போது மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.இந்த போட்டி மலேசியாவில் நவ.23, 24 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

இதில் பங்கேற்க விமான கட்டணம், போக்குவரத்து மற்றும் உணவு தங்குமிடத்திற்கு ரூ.55 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் மாணவரின் குடும்பம் ஏழ்மையில் உள்ளதால் அந்த பணத்தை செலுத்திட முடியவில்லை. எனவே மலேசியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க மாணவருக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு உதவி செய்யவேண்டும் என சக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : student ,Malaysia , International competition, Malaysia, finance, student
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...