×

சிவகங்கையில் பஸ் கண்ணாடி உடைப்பு பாஜ தலைவர் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (38). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், வழக்கு விசாரணைக்காக கடந்த செப். 7ம் தேதி சிவகங்கை கோர்ட்டில் ஆஜராகி விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ராஜசேகரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி, செப். 8ம் தேதி நடைபெற்ற சாலைமறியலின் போது அவ்வழியே சென்ற பஸ் ஒன்றின் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் பாஜ சிவகங்கை நகர் தலைவர் தனசேகரனை நேற்று கைது  செய்தனர்.


Tags : Baja ,bus glass breakage ,Sivaganga , Sivaganga, bus mirror, Baja leader, arrested
× RELATED பாஜ பிரமுகருக்கு கத்திக்குத்து