×

தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார்: ரஜினிக்கு துரைமுருகன் பதில்

சென்னை: “தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார்” என்று ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் ஆளுமைக்கான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பி விட்டார். அரசியலில் இருந்திருந்தால் ரஜினிக்கு இது தெரிந்திருக்கும். அரசியலில் இல்லாததால் அது அவருக்கு தெரியவில்லை. அவருக்கு யார் காவி பூசினார்கள். யாருக்கு பதில் சொன்னார் என்று தெரியவில்லை’’ என கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,MK Stalin , Tamilnadu, MK Stalin,: Rajini, Duraimurugan p
× RELATED தலைவரே, இயற்கை உங்களை எங்களிடமிருந்து...