×

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை - ெசங்கல்பட்டு இடையே 11ம் தேதி இரவு 8.01 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 11ம் தேதி இரவு 9.18 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் - சங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே 11ம் தேதி இரவு 10.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே 11ம் தேதி இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 3.55, 4.35, 5.15, 5.50, 6.05, 6.43 மணிக்கும், இரவு 5.18, 8.01, 9.18 இயக்கப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 3.55, 4.35, 4.50, 6.40, 6.55, 8.40 மணிக்கும், இரவு 7.25, 10.15, 11.10 மணிக்கும் இயக்கப்படும் ரயில் 12, 15ம் தேதிகளில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து : பராமரிப்பு பணி காரணமாக, வரும் 16ம் தேதி மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் காச்சிகோடா- செங்கல்பட்டு  ரயில், தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயும், 17ம் தேதி காலை 7 மணிக்கு மதுரை- சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு- சென்னை எழும்பூர் இடையேயும், 17ம் தேதி பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை எழும்பூர்- மதுரை வரை இயக்கப்படும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர்- செங்கல்பட்டு இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், 17ம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு- காச்சிகோடா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையேயும், 17ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு- காக்கிநாடா சர்கார் எக்ஸ்பிரஸ்  ரயில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : cancellation ,Southern Railway ,Chengalpattu Southern Railway ,Chengalpattu ,Tambaram , Southern Railway announces, cancellation of electric trains ,Chengalpattu and Tambaram
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...