×

பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கு தீர்ப்பை ஏற்க வேண்டும் : எஸ்டிபிஐ அறிக்கை

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்டுள்ள அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபரி மஸ்ஜித் வழக்கு தொடர்பான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. தீர்ப்பு எவ்வகையில் அமைந்தாலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எந்தவித கொண்டாட்டங்களோ, துக்கத்தை வெளிப்படுத்தும் எந்தவித நிகழ்வுகளோ இருக்கக்கூடாது.

மக்கள் ஆவேசமான கருத்துக்களை சொல்லாமல் இருப்பதுடன், சமூக வலைதளங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் நாடு பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள போது மக்களிடையே மதரீதியிலான இடையூறுகள் ஏற்பட்டால், நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும். எனவே, பாபரி மஸ்ஜித் இடம் தொடர்பான தீர்ப்புக்குப்பின் அனைத்து தரப்பு மக்களும் அமைதியைக் காக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நீண்டகால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதோடு, தேசமக்கள் ஒன்றிணைந்தும், சுமூகமாக வாழவும் பிரார்த்திக்கிறேன்.


Tags : Babri masjid ,STBI , Babri masjid case ,accepted, STBI report
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...