×

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் சண்டை கர்நாடகா வீரர் வீர மரணம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் வீரர் ஒருவர் பலியானார்.  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில்  கிருஷ்ணாகதி பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நள்ளிரவு 2.30 மணியளவில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து உஷாரான வீரர்கள், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பதிலுக்கு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் வீரர் ஒருவர் காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்த வீரர் கர்நாடக மாநிலம், பெல்காவி மாவட்டத்தை சேர்ந்தவர்.


Tags : war hero ,Karnataka ,militants ,border ,Kashmir ,fighting , Fighting, militants on Kashmir border
× RELATED காஷ்மீரில் அதிரடி 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை