×

என் காலத்தில் விளையாடியிருந்தால் அவன் மூஞ்சிய உடைச்சிருப்பேன்: ஸ்மித் அதிரடியால் சோயிப் அக்தர் அலறல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது அசுரவேக பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பவுலர்களில் ஒருவர். இந்நிலையில், பால் டெம்பரிங் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திேரலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு வருடத்துக்குப் பின் சர்வதேச அரங்குக்குத் திரும்பினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 80 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஸ்மித் உதவினார். இதுகுறித்து, சோயிப் அக்தர் கூறியதாவது:

ஸ்மித்தின் பேட்டிங் எனக்கு அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதில் பெரிய நுணுக்கமோ அல்லது ஸ்டைலோ இல்லை. ஆனால், துணிச்சல் அதிகமாக காணப்படுகிறது. அதுதான் அவர் சாதிக்க பெரிய அளவில் கைகொடுக்கிறது. குறிப்பாக முகமது அமீர் பந்துவீச்சை ஸ்மித் கொஞ்சம் கூட சட்டை பண்ணுவது இல்லை. அதை அவர் எப்படி செய்கிறார் என்ேற புரியவில்லை. அவர் மட்டும் எனது காலகட்டத்தில் விளையாடியிருந்தால், கண்டிப்பாக 3 அல்லது 4 முறையாவது அவரின் முகத்தை பதம் பார்த்திருப்பேன்.

அவரை காயப்படுத்தியாவது, ரன் சேர்ப்பதை தடுத்திருப்பேன். ஆனால், ஸ்மித் போன்ற வீரரை காயப்படுத்துவது கூட அவ்வளவு சுலபமான காரியமில்லை. அந்தளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரின் சிறந்த எதிர்காலத்துக்கு என் வாழ்த்துக்கள். தடைகாலத்துக்கு பின் மீண்டும் டெஸ்டில் சாதித்த ஸ்மித்தை, சிறந்த டி20 வீரர் இல்லை என்றனர். ஆனால் அவர்கள் மூஞ்சியில் ஸ்மித் கரியை பூசி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Smith ,Shoaib Akhtar , Smith, Shoaib Akhtar
× RELATED ‘ஒருநாள்’ கேப்டன் ஸ்மித்