முதல்வர் பதவியை 2.5 ஆண்டு சிவசேனாவுக்கு வழங்குவதாக ஒருபோதும் கூறவில்லை : தேவேந்திர பட்னவிஸ்

மும்பை : கடந்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் பாஜக சிறப்பான ஆட்சியை அளித்தது என்று தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் ஆளுநரை சந்தித்த ஃபட்னாவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 5 ஆண்டுகள் மராட்டிய முதல்வராக சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி கூறினார். மேலும் அவர் பேசியது குறிப்புகளாக பின்வருமாறு,

*என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

*முதல்வர் பதவியை 2.5 ஆண்டு சிவசேனாவுக்கு வழங்குவதாக ஒருபோதும் கூறவில்லை.

*ஆட்சியில் சமபங்கு என்பது குறித்து தனது முன்னிலையில் சிவசேனை எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

*கடந்த காலங்களில் பலமுறை சிவசேனை கட்சி தங்களை அவமானப்படுத்தி உள்ளது.


Tags : Devendra Patnavis ,Chief Minister ,Shiv Sena , Resignation of Maharashtra, Devendra Fadnavis, Governor, Bhagat Singh Koshyari
× RELATED தமிழக முதல்வர் கோவை வருகை